search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் ரோந்து"

    வேலாயுதம்பாளையம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து 45 மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம், என். புதூர், கிழக்கு தவுட்டுப்பாளையம், நெய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டி, டிராக்டர், லாரி, மற்றும் தவுட்டுபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டைகளில்  திருட்டு தனமாக மணல் அள்ளி வருவதாக கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராசுவிற்கு  புகார் மனு சென்றது. அதன் அடிப்படையில் நேற்று 15-ந் தேதி  வேலாயுதம் பாளையம் போலீஸ்இன்ஸ் பெக்டர் குருநாதன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஆறு முகம் மற்றும்  போலீசார் வேலாயுதம்பாளையம் -கொடுமுடி நெடுஞ்சாலையில் சேமங்கி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது சேமங்கி காவிரி ஆற்றுப் படுகையில் சென்று பார்த்த போது ஒரு சரக்கு ஆட்டோவில் சுமார் 45 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.சம்பவ இடத்திற்கு சென்றபோது சரக்கு ஆட்டோ டிரைவர் சேமங்கி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த ஜெகதீசன்(41) என்பவர் சரக்கு ஆட்டோவை விட்டு விட்டு தப்பி ஓட முயன்றார். போலீசார் சுற்றி வளைத்து ஜெகதீசனை கைது செய்து சரக்கு ஆட்டோவை  பறிமுதல் செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
    வனப்பகுதியிலிருந்து மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் நக்சல் தடுப்பு போலீசார் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். #Maoist

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளுக்குள் பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மெண்ட்கள் உள்ளன. தமிழக வனப்பகுதியின் தொடர்ச்சியாக கேரள வனப்பகுதி மிக அதிக பரப்பளவில் உள்ளது.

    இதில் கேரள வனப்பகுதியிலிருந்து மாவோயிஸ்டுகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் நக்சல் தடுப்பு போலீசார் அவ்வப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நக்சல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி, ஆகியோர் அடங்கிய குழுவினர் வால்பாறை பகுதியில் உள்ள நெடுங்குன்று, பரமன்கடவு, ஆகிய செட்டில்மெண்ட் பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    துப்பாக்கியுடன் ரோந்து சென்ற போலீசார்.

    இதில் வனப்பகுதிக்குள் புதிய நபர்களைக் கண்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பழங்குடியின மக்களிடம் அறிவுறுத்தினர்.

    கொட்டும் மழையில் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து சென்றதால் மலை கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டது. #Maoist

    அஞ்சுகிராமத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் அழகப்பபுரம் சந்திப்பில் வரும் போது போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் ஓடினார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் அந்த பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது37) என்பதும் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் மயிலாடி சந்திப்பில் அனுமதியின்றி மது விற்றதாக நெல்லை மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த மாரியப்பன் (42) என்பவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×